இலங்கை

மண்சரிவு குறித்து சிவப்பு எச்சரிக்கை

Published

on

மண்சரிவு குறித்து சிவப்பு எச்சரிக்கை

இரத்தினபுரி மாவட்டத்தின் வெலிகேபொல, இம்புல்பே, பலாங்கொடை, ஓபநாயக்க மற்றும் கொலன்ன ஆகிய பகுதிகளுக்கு சிவப்பு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதற்கமைய பதுளை மாவட்டத்தின் பதுளை பகுதிக்கும் நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை பிரதேசத்திற்கும் முதல் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், கண்டி மாவட்டத்தில் தெல்தோட்டை பிரதேசத்திற்கு முதல் நிலை எச்சரிக்கையும், தொலுவ மற்றும் பஸ்பாகே கோரளைக்கு இரண்டாம் நிலை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

Exit mobile version