இலங்கை

கனடாவில் தமிழீழத்திற்கு கிடைத்த அங்கீகாரம்

Published

on

கனடாவில் தமிழீழத்திற்கு கிடைத்த அங்கீகாரம்

புலம்பெயர் ஈழத்தமிழ் சமூகம் அதிகளவில் வாழும் கனடாவில் பிராம்டன் நகர மண்டபத்தில் தமிழீழத் தேசியக்கொடி ஏற்றப்பட்ட வரலாற்று நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

பிராம்டன் நகர முதல்வர் பேட்ரிக் பிரவுன் நேற்று (21.11.2023) காலை 8.30 மணிக்கு தமிழீழத் தேசியக்கொடியை ஏற்றி மரியாதை செய்த இந்த வரலாற்று நிகழ்வை செய்துள்ளார்.

பிரம்டன் நகரசபை வளாகத்தில் தமிழீழ தேசியக்கொடி ஏற்றப்பட்ட முதல் சந்தர்ப்பமாகவும் இது பதிவாகியுள்ளது.

மாவீரர்களின் குருதியாலும், மக்களின் தியாகத்தாலும் நெய்யப்பட்ட தமிழீழத் தேசியக்கொடியை உலகின் அங்கீகாரத்திற்கு எடுத்துச் செல்லும் முதற்படியாக இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது. தமிழீழத் தேசியக் கொடி தினத்தை முன்னிறுத்தி இந்த நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

பேட்ரிக் பிரவுன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்ததாவது, இன்று நாம் அனைவரும் தமிழீழத் தேசியக் கொடி அறிமுகப்படுத்தப்பட்ட 33 ஆம் ஆண்டு நிறைவை மரியாதை செலுத்தும் முகமாக பிரம்டன் நகர மண்டபத்தில் ஒன்று கூடினோம்.

இன்று மட்டுமல்ல ஒவ்வொரு நாளும், நாங்கள் கனடாவாழ் ஈழத்தமிழர்களின் எழுச்சியையும், பிரம்டன் மற்றும் கனடா முழுவதுமான எமது சமூகங்கள் அனைத்தையும் வளப்படுத்துவதில் அவர்கள் ஆற்றிவரும் பங்களிப்பையும் கொண்டாடுவோம்.

ஈழத்தமிழர்களுக்கு எதிரான இன அழிப்பையும் மனித உரிமைமீறல்களையும் தொடர்ந்துகொண்டிருக்கும் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பையும் ஒரு போதும் மறக்கமாட்டோம் என குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version