இலங்கை
இலங்கை வர்த்தகர்களுக்கு எச்சரிக்கை
இலங்கை வர்த்தகர்களுக்கு எச்சரிக்கை
நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரிகள் என்ற போர்வையில் தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு வர்த்தகர்களிடம் பணம் பறிக்கும் சம்பவங்கள் தொடர்பில் வர்த்தகர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கட்டுப்பாட்டு விலையை மீறி சீனி விற்பனை செய்யவதாகவும் சீனியை மறைத்து வைத்திருப்பதாகவும் குற்றம் சுமத்தி அவ்வாறானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக பணம் வழங்குமாறு கோரப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு ஒரு கும்பல் ஒன்று வர்த்தகர்களுக்கு அழைப்பு எடுத்து பணம் பறித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறான தொலைபேசி அழைப்புகள் கிடைக்கப்பெற்றால் அது குறித்து பொலிஸாருக்கு அறிவிக்குமாறு நுகர்வோர் அதிகாரசபை அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
இதைவேளை சீனியின் கட்டுப்பாட்டு விலையை விடவும் அதிக விலைக்கு சீனி விற்பனை செய்த 300 பேருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அதிகார சபை தெரிவித்துள்ளது.
கடந்த 10 நாட்கள் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்புகளின் மூலம் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கட்டுப்பாட்டு விலையை மீறி சீனி விற்பனை செய்து வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வழக்கு தொடரப்படும் எனவும் நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது.