இலங்கை

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு போதுமானதல்ல!

Published

on

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு போதுமானதல்ல!

அரசாங்க ஊழியர்கள் 20,000 ரூபா சம்பள உயர்வை எதிர்பார்த்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் கூறுகையில், 20,000 ரூபா சம்பள உயர்வை அரசாங்க ஊழியர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் 10,000 ரூபா கொடுப்பனவு மாத்திரமே உயர்த்தப்பட்டுள்ளது.

இவ்வாறு வரவு செலவுத் திட்டத்தில் உயர்த்தப்பட்டுள்ள அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு போதுமானதல்ல என தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் ஜனாதிபதியால், 2024 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Exit mobile version