இலங்கை

தனியாருக்கு வழங்கப்படும் அரச கட்டிடங்கள்

Published

on

தனியாருக்கு வழங்கப்படும் அரச கட்டிடங்கள்

ஹோட்டல் துறைக்கு கையளிக்கப்படும் அஞ்சல் நிலைய கட்டிடங்கள் மூலம் கிடைக்கும் வருமானம் நட்டத்தில் உள்ள அஞ்சல் துறைக்கு மாற்றப்படும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

வரலாற்று சிறப்பு மிக்க நுவரெலியா அஞ்சல்; நிலையத்திற்கு மேலதிகமாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் ஊடாக ஹோட்டல் (விருந்தக) திட்டங்களுக்காக தியத்தலாவ மற்றும் காலியில் அமைந்துள்ள ஒல்லாந்தர் காலத்தின் இரண்டு அஞ்சல் நிலைய கட்டிடங்களும் கண்டி மற்றும் நுவரெலியாவில் மேலும் மூன்று பழமையான கட்டிடங்களும் வழங்கப்பட உள்ளன.

இந்நிலையில் நகர அபிவிருத்தி அதிகாரசபை, ஏற்கனவே அஞ்சல் மா அதிபரிடம் இருந்து நுவரெலியா அஞ்சலக அலுவலக கட்டிடத்தை பெற்றுள்ளது.

அந்த கட்டிட வளாகம் புதுப்பிக்கப்பட்டு, அஞ்சல் சேவைகள் செயல்பட அனுமதிக்கப்படும், அதே நேரத்தில் ஒரு ஏக்கர் நிலம் உட்பட மீதமுள்ள பகுதி ஹோட்டலுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடிதங்கள் மற்றும் பொதிகளை ஒப்படைத்தல் மற்றும் முத்திரைகள் விற்பனை ஆகியவை அஞ்சல் நிலையத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் செயற்பாட்டு பகுதி மற்றும் நிர்வாகப் பிரிவு நுவரெலியா மாநகர சபையின் அருகிலுள்ள காணிக்கு மாற்றப்படும் எனவும் அஞ்சல் துறை மற்றும் ஹோட்டல் துறையில் சேவை செய்பவர்கள், அஞ்சல் ஊழியர்கள் அணியும் பாரம்பரிய உடைகளை அணியவேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.

ஹோட்டல் திட்டங்களுக்காக கையளிக்கப்படும் கட்டிடங்களில், நுவரெலியாவில் உள்ள உள்நாட்டு இறைவரி மற்றும் துறைமுக அதிகாரசபை விடுதிகளும் உள்ளடங்குகின்றன.

அதேவேளை கண்டியில் எஹெலேபொல வால்வா என்ற வரலாற்று கட்டிடம் இந்த திட்டத்திற்காக வழங்கப்பட உள்ளது.

அத்துடன் கண்டி அஞ்சல்; நிலையத்திலும் உத்தேச ஹோட்டல் திட்டத்தை முன்னெடுக்க, முதலீட்டாளர் ஒருவரைக் கண்டறியுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version