இலங்கை

வியாஸ்காந்தை தேசிய அணியில் இணைக்காதது ஏன்…!

Published

on

வியாஸ்காந்தை தேசிய அணியில் இணைக்காதது ஏன்…!

இலங்கை கிரிக்கெட் அணியை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாத துர்பாக்கிய நிலையில் நாம் இருக்கிறோம்.அண்மையில் LPL போட்டிகளில் பிரகாசித்த வியாஸ்காந்திற்கு உரிய முறையில் பயிற்சி வழங்கப்படுமானால் அவரால் தேசிய அணியின் வெற்றிக்கு பங்களிக்க முடியும்.சிறுபான்மை இனம் என்பதால் அவரை உள்வாங்கவில்லையென நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை நாடாளுமன்றத்தில் நேற்று(10.11.2023) கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இந்திய அணியை பார்த்தால் அங்கு திறமையானவர்கள் உள்வாங்கப்படுகிறார்கள்.

இன,மத, மாநில வேறுபாடினன்றி தகுதியானவர்கள் அங்கு இணைக்கப்படுகிறார்கள். உதாரணமாக இந்திய அணியில் உலகக்கிண்ண போட்டியில் பிரகாசித்த கொண்டிருக்கும் அங்கே சிறுபான்மையினமாக இருக்க கூடிய மொகமட் சிராஜ், மொகமட் சமி நாட்டின் வெற்றியில் பங்கெடுத்தனர்.

இலங்கை கிரிக்கெட் அணியில் சிறுபான்மை இனம் ஓரங்கட்டப்படுகிறார்கள் ,ஒதுக்கப்படுகிறார்கள். கிரிக்கெட் நிர்வாகத்தினால் சிறுாபன்மையின வீரர்கள் திட்டமிட்டு புறந்தள்ளப்படுகிறார்கள். முக்கியமாக வடக்கு,கிழக்கு வீரர்கள் இணைக்கப்படுவதில்லை.

இலங்கை கிரிக்கெட் அணியை சிங்கள அணியென அழைப்பதே உத்தமம்”என கூறியுள்ளார்.

Exit mobile version