இலங்கை

மர்மமான முறையில் பெண்ணொருவர் படுகொலை!

Published

on

மர்மமான முறையில் பெண்ணொருவர் படுகொலை!

கம்பளை தெல்பிடிய தேவிட பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண் கொலை செய்யப்பட்டு கட்டிலுக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளார்.

பத்மா தர்மசேன என்ற 63 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

சடலமாக மீட்கப்பட்ட பெண் பண கொடுக்கல் வாங்கல் தொடர்பில் நகருக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அடையாளம் தெரியாத நபரொருவர் அவரை கொலை செய்து அவரிடம் இருந்த பணத்தை பறித்துச் சென்றிருக்கக்கூடும் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

Exit mobile version