இலங்கை

ரணிலுக்கு நிபந்தனை விதிக்கும் மகிந்த கட்சி

Published

on

ரணிலுக்கு நிபந்தனை விதிக்கும் மகிந்த கட்சி

அடுத்தாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு முன்னர் பொதுஜன பெரமுன தலைமையிலான குழு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திக்கவுள்ளது.

எதிர்வரும் மூன்று நாட்களுக்குள் இந்த விசேட கூட்டத்தை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வரவு செலவுத் திட்டத்தில் தமது ஆதரவு வேண்டுமாயின் மக்களுக்கு சாதகமான யோசனைகளை வரவு செலவுத் திட்டத்தில் வழங்குமாறு பொதுஜன பெரமுன பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, எதிர்வரும் திங்கட்கிழமை வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னதாக விசேட அமைச்சரவைக் கூட்டமொன்று காலை நடைபெறவுள்ளது.

Exit mobile version