இலங்கை

நிதியமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை

Published

on

நிதியமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை

நுண்கடன் நிதி தொடர்பில் பதிவு செய்யாத நிறுவனங்கள் 05 இலட்சம் ரூபா தண்டப்பணம் செலுத்த வேண்டும். தண்டப்பணம் செலுத்த தவறும் பட்சத்தில் 5 வருடகால சிறைத்தண்டனைக்கு உள்ளாக நேரிடும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டில் 11 ஆயிரம் நுண்கடன் நிதி நிறுவனங்கள் இயங்குகின்ற நிலையில் அவற்றில் 05 நிறுவனங்கள் மாத்திரமே பதிவு செய்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பு – மஹரக பகுதியில் இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும், நுண்கடன் நிதி நிறுவனங்களின் முறையற்ற செயற்பாடுகளினால் சுமார் 30 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள் எனவும் கூடியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், “நுண்கடன் நிதி நிறுவனங்களை அடிப்படையாகக் கொண்டு தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகள் சர்வதேச மட்டத்தில் பேசப்படுகின்றன.

இந்த திட்டத்தினை முன்னிலைப்படுத்திய தவறான உயிர் மாய்ப்பு முயற்சிகள, முரண்பாடுகள் உள்ளிட்ட பல பிரச்சினைகள் சமூக கட்டமைப்பில் காணப்படுகின்றன.

நாட்டில் 11 ஆயிரம் நுண்கடன் நிதி நிறுவனங்கள் இயங்குகின்ற நிலையில் அவற்றில் 05 நிறுவனங்கள் மாத்திரமே பதிவு செய்யப்பட்டுள்ளன.

பதிவு செய்ய பதிவு செய்யப்படாத நிதி நிறுவனங்கள் தான் முறையற்ற வகையில் செயற்படுகின்றன. நிதி நிறுவனங்களை பதிவு செய்வதை கட்டாயப்படுத்தும் சட்டமூலம் எதிர்வரும் மாதமளவில் நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும்.

நுண்கடன் நிதி நிறுவனங்களை கண்காணிக்கும் வகையில் நுண்கடன் கண்காணிப்பு அதிகார சபை அடுத்த ஆண்டு ஜனவரி மாதமளவில் ஸ்தாபிக்கப்படும்.

இதனை தொடர்ந்து சகல நுண்கடன் நிதி நிறுவனங்களும் மத்திய வங்கியினால் நேரடியாக கண்காணிக்கப்படும்” என்றார்.

Exit mobile version