இலங்கை

இலங்கையின் நெருக்கடியில் அமெரிக்கா துணை

Published

on

இலங்கையின் நெருக்கடியில் அமெரிக்கா துணை

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜீலி சங் மற்றும் கல்வி அமைச்சர் பிரேமஜயந்தவிற்குமிடையிலான சந்திப்பு நேற்று(6) இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பில் இலங்கை மாணவர்களின் கல்வி தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக ஜீலி சங் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் (டுவிட்டர்) தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “பேராதனை மற்றும் சிகாகோவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்திற்கு இடையில் நடைபெறவிருக்கும் ஆசிரியர் பரிமாற்றம் உட்பட கல்வி ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடினோம்”.

மேலும், பாடசாலை மாணவர்களுக்கு ஊட்டச்சத்து, மதிய உணவுகள், கல்வியறிவை ஊக்குவித்தல், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கான ஆங்கில கல்வி அறிவு மற்றும் மாணவர்களின் தலைமைத்துவத் திறன்களை வளர்த்தல் போன்ற விடயங்களில் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து அமெரிக்கா செயற்படவுள்ளதாக ஜீலி சங் தெரிவித்துள்ளார்.

இது போன்ற செயற்பாடுகளுக்கு வலுவூட்டும் வகையில் அமெரிக்கா இலங்கைக்கு துணை நிற்கும் எனவும் அவர் நம்பிக்கையை வெளியிட்டுள்ளார்.

Exit mobile version