அரசியல்
தென்னிலங்கை அரசியலில் ஏற்படவுள்ள மாற்றம்
தென்னிலங்கை அரசியலில் ஏற்படவுள்ள மாற்றம்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது அமெரிக்க குடியுரிமையை கைவிடுமாறு முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட தலைவர்கள் பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஏற்கனவே ஐக்கிய மக்கள் கட்சி மற்றும் தேசிய மக்கள் சக்தி கட்சி ஆகியன ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்துள்ளன.
குறித்த கட்சிகள் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகி வரும் பின்னணியில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் வேட்பாளரை அறிவிக்காதது அரசியல் ரீதியாக பாதகமானது என மூத்த தலைவர்கள் அவரிடம் தெரிவித்துள்ளனர்.
முதிர்ந்த அரசியல்வாதியாகவும், பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகவும், நிதியமைச்சராகவும் பசில் ராஜபக்ஷ ஆற்றிய பாத்திரத்தை கருத்திற்கொண்டு, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியினால் முன்வைக்கப்படக்கூடிய மிகவும் பொருத்தமான வேட்பாளர் பசில் ராஜபக்ஷ கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்குத் தயாராகுமாறு பசில் ராஜபக்சவிடம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மூன்று தடவைகள் கேட்டுக் கொண்டதாகவும், ஆனால் வியத்மக போன்ற அமைப்புக்களின் வேண்டுகோளுக்கமைய, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வேட்புமனு வழங்கியதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.