இலங்கை

பணிப்புறக்கணிப்பில் ஈடுபடும் அரச வைத்தியர்கள்

Published

on

பணிப்புறக்கணிப்பில் ஈடுபடும் அரச வைத்தியர்கள்

நாடளாவிய ரீதியில் உள்ள அரச வைத்தியசாலைகளில், மாகாண மட்ட அடையாள பணிப்புறக்கணிப்பு ஆரம்பிக்கப்படவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

பணிப்புறக்கணிப்பு போராட்டமானது இன்று (02.11.2023) முதல் இடம்பெறும் என சங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த தகவலை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சம்மில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள சுகாதார சீர்கேட்டைத் தடுக்க அரசாங்கம் மருத்துவர்களைத் தக்கவைக்கத் தவறியமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி, ஊவா மாகாணத்தில் இன்று காலை 08.00 மணி முதல் 24 மணித்தியால அடையாள பணிப்புறக்கணிப்பு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version