இலங்கை

டயான கமகேவிற்கு எதிரான மனுவை நீதிமன்றம் தள்ளுபடி

Published

on

டயான கமகேவிற்கு எதிரான மனுவை நீதிமன்றம் தள்ளுபடி

இராஜாங்க அமைச்சர் டயான கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வலுவிழக்கச் செய்து உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

மூவரடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பெரும்பான்மையான நீதிபதிகளின் இணக்கப்பாட்டின் அடிப்படையில் குறித்த மனு தள்ளுபடி செய்யப்படுவதாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

டயான கமகே, பிரித்தானிய குடியுரிமை பெற்றுள்ளதால், நாட்டின் அரசியலமைப்பின் பிரகாரம் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகவும், அமரவும், வாக்களிக்கவும் தகுதியில்லை என தீர்ப்பளிக்குமாறு கோரி சமூக செயற்பாட்டாளரான ஓஷல ஹெராத்தினால் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

Exit mobile version