அரசியல்

ஜனாதிபதியினால் மொட்டு கட்சியின்மேல் அதிருப்தி அடைந்துள்ள மக்கள்

Published

on

 

ஜனாதிபதியினால் மொட்டு கட்சியின்மேல் அதிருப்தி அடைந்துள்ள மக்கள்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் செயற்பாடுகள் காரணமாக, பொதுஜன பெரமுன கட்சியின் மீது மக்கள் அதிருப்தியை கொண்டுள்ளனர் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அண்மைய அமைச்சரவை மாற்றத்தின்போது பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் புறக்கணிக்கப்பட்டனர் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், கட்சியின் உறுப்பினர்கள், நாமல் ராஜபக்சவின் தலைமையில் சந்தித்து கலந்துரையாடினர்.

மலலசேகர மாவத்தையில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் இல்லத்தில் சந்திப்பு இடம்பெற்றது. இதில் கொழும்பிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வசிக்கும் பெரும்பாலான இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

மக்களுக்கான நிவாரணங்களை வழங்குமாறு, தாம் விடுத்த கோரிக்கைகளுக்கு ஜனாதிபதி செவிசாய்க்கவில்லை என அவர்களால் இதன்போது முறைப்பாடு செய்யப்பட்டது.

மாறாக, சர்வதேச நாணய நிதியத்தால் வலியுறுத்தப்பட்ட மேலும் ‘சீர்திருத்தங்களை’ செயல்படுத்துவதன் மூலம் அவர், மக்களுக்கு துயரத்தையே வழங்கி வருகிறார் எனவும் மின்சாரம் மற்றும் தண்ணீர் கட்டண உயர்வு மற்றும் தொழில் வல்லுநர்கள் மீது விதிக்கப்படும் வரிகள் உள்ளிட்ட பெரும்பாலான பிரச்சனைகளுக்கு கட்சியே காரணம் என்று பொதுமக்கள் குற்றம் சுமத்துவதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதன்போது குறிப்பிட்டுள்ளனர்.

இந்தநிலையில் கணிசமான நிவாரணம் வழங்கவில்லை என்றால், வரவிருக்கும் வரவு செலவுத் திட்டத்திற்கு பொதுஜன பெரமுன ஆதரவளிக்கக் கூடாது என்று சிலர் கருத்துக்கூறினர்.

இறுதியில், இந்த நாடாளுமன்ற உறுப்பினர்னள், சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்களான மகிந்த ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோரிடம் ஆலோசனைகளை பெற்று செயற்படுமாறு நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

Exit mobile version