இலங்கை
கிழக்கு உயரமான பாலமுருகன் சிலைக்கு திருக்குடமுழுக்கு
கிழக்கு உயரமான பாலமுருகன் சிலைக்கு திருக்குடமுழுக்கு
மட்டக்களப்பு தாதாந்தாமலையில் கிழக்கு மாகாணத்தில் மிக உயர்ந்த பாலமுருகன் சிலை 40 வட்டையடி சந்தியில் ஸ்தாபிக்கப்பட்டு குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது.
குறித்த குடமுழுக்கு வைபவமானது இன்று(23.10.2023) தாந்தாமலை முருகன் ஆலயத்தின் பிரதமகுரு மு.கு.சச்சிதானந்த குருக்கள் தலைமையில் நடைபெற்றுள்ளது.
இதன்போது விசேட யாகபூஜை, கும்பபூஜை நடைபெற்றதை தொடர்ந்து முச்சந்தி விநாயகர் ஆலயம் குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து பாலமுருகனுக்கு விசேட பூஜைகள் அபிசேகம் செய்யப்பட்டதை தொடர்ந்து மஹா குடமுழுக்கு சிறப்பாக நடைபெற்றுள்ளது.
குறித்த பெருவிழாவில் நீர்பாசன திணைக்களத்தின் உயர் அதிகாரிகள்,பொதுமக்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.