Connect with us

அரசியல்

அனுரகுமாரவை எவ்வாறு நம்புவது: ஆட்சி அதிகாரத்தை வழங்க முடியாது

Published

on

23 653c4e0a057fe

அனுரகுமாரவை எவ்வாறு நம்புவது: ஆட்சி அதிகாரத்தை வழங்க முடியாது

பிழைத்தால் ஐந்து ஆண்டுகள் தானே பொறுத்துக்கொள்ளுங்கள் என்ற தொனியில் சிரித்துக் கொண்டே கூறும் அனுரகுமாவை எவ்வாறு நம்புவது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆசூ மாரசிங்க கேள்வி எழுப்பியுள்ளார்.

சிரிகொத்தவில் அமைந்துள்ள ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கட்சியின் விசேட பேச்சாளர் மாநாட்டில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக தற்போதைய ஜனாதிபதி கட்சிக்கும் நாட்டுக்கும் நல்ல ஒரு முன்னுதாரணத்தை வழங்கி, “என்னில் இருந்து ஆரம்பிப்போம்” என்ற தொனிப் பொருளில் நாட்டுக்காக தமது பங்களிப்பை தாமே வழங்க வேண்டும் என்ற நடவடிக்கையை தொடங்க வேண்டும் என்ற செய்தியை நாட்டு மக்களுக்கு வழங்கியள்ளார்.

 

மேலும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல், பொதுத் தேர்தல் மாகாண சபை தேர்தல் மற்றும் ஏனைய தேர்தல் நடத்தப்பட உள்ளதாக ஜனாதிபதி கூறினார்.

 

உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு உயர்நீதிமன்றில் மனுத்தாக்கல்

உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு உயர்நீதிமன்றில் மனுத்தாக்கல்

ஐந்து ஆண்டுகளுக்கு சந்தர்ப்பம்

கடந்த வாரத்தில் தேசிய மக்கள் சக்தி என் தலைவர் அனுரகுமார திசாநாயக்க கருத்து ஒன்றை வெளியிட்டிருந்தார்.

 

75 வருடங்களாக இந்த நாட்டை அழித்துள்ளனர். எனவே எனக்கும் ஐந்து ஆண்டுகளுக்கு சந்தர்ப்பம் வழங்குமாறு அவர் கோரியிருந்தார்.

 

மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு பிழைத்தால் பரவாயில்லை தானே என்ற அர்த்தத்தில் அவர் இந்த கருத்தை வெளியிட்டு இருந்தார்.

 

மேலும் தெரிவிக்கையில்,

 

இந்த கருத்து மூலம் இந்த நாட்டை ஆட்சி செய்வதற்கான நம்பிக்கை அவரிடம் இல்லை என்பது தெரிய வருகின்றது.

 

பரீட்சார்த்த அடிப்படையில் தமக்கு வழங்குமாறு அவருக்கு கூறுகின்றார். இந்த நாட்டின் பல்வேறு மக்கள் பல்வேறு விடயங்களை பரீட்சார்த்தமாக முன் எடுக்கச் சென்று பாடங்களை கற்றுக் கொண்டுள்ளனர்.

 

கோட்டாபய ராஜபக்ச போர் வீரர் என்ற வகையில் அரசியலில் ஈடுபடாதவர் எனவும் வியத் மக அமைப்பினால் இவருக்கு ஆதரவும் வழங்கப்பட்டது. 69 இலட்சம் வாக்குகளை பெற்றுக் கொண்ட அவருக்கு இரண்டு ஆண்டுகளில் வீடு செல்ல நேரிட்டது.

 

அனுர குமார திசாநாயக்கவிற்கு நன்றாக தெரியும் 51 வீதமான வாக்குகளை பெற்றுக் கொள்ள முடியாது என்பது.

 

இதன் காரணமாகவே தமக்கு ஐந்து ஆண்டுகள் ஆட்சி செய்ய ஒரு சந்தர்ப்பம் வழங்குமாறு, கெஞ்சும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

 

இந்த நாட்டில் அனுபவ முதிர்ச்சியற்ற அரசியல் தலைமையில் பயனில்லை என்பது இலங்கைக்கும் உலகிற்கும் நன்றாக தெரியும்.

 

உதாரணமாக ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து விளையாடி வொளொடிமிர் செலென்ஸ்கீ உக்ரைனின் அதிகாரத்தை பெற்றுக் கொண்டார். எனினும் இன்று போர் காரணமாக அவரின் ஆட்சி இல்லாமல் போயுள்ளது.

 

எதிர்வரும் காலங்களில் மக்கள் அவர்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள். ஆட்சி அதிகாரத்தை தருமாறு கெஞ்சுமளவிற்கு நிலைமை உருவாகியுள்ளது.

 

தற்செயலாக அவர்களுக்கு ஆட்சி அதிகாரம் ஐந்து ஆண்டுகளுக்கு கிடைக்கப்பெற்றால் அந்தக் காலம் முழுவதும் அவர்கள் ஆட்சியில் இருப்பார்களா?

 

காம்போடியாவில் மக்கள் விடுதலை முன்னணி போன்ற ஒரு கட்சியே ஆட்சி அதிகாரத்தை பெற்றுக் கொண்டது. நாட்டை அபிவிருத்தி செய்ய அவர்களிடம் திட்டம் இருக்கவில்லை. பணமும் இருக்கவில்லை. நகரங்களில் படித்தவர்களை கிராமங்களுக்கு விரட்டி அங்கு சென்று விவசாயம் செய்யுமாறு உத்தரவிட்டனர்.

 

மக்கள் விடுதலை முன்னணியின் ஆட்சி

அரசாங்கம் இலட்சக்கணக்கானவர்களை கொன்று குவித்தது. இலங்கையில் மக்கள் விடுதலை முன்னணி ஆட்சிக்கு வந்தால் இதே ஒரு நிலைமையை இங்கும் ஏற்படும் என்பதை நாம் தெளிவுபடுத்த வேண்டியுள்ளது.

 

மக்கள் விடுதலை முன்னணியினர் ஆட்சி பொறுப்பை ஏற்றுக் கொண்டால் கம்போடியா, வடகொரியா அல்லது கியூபா போன்ற நாடுகளின் உதாரணங்களே நாம் இங்கே பார்க்க முடியும்.

 

அவ்வாறு அதிகாரத்தை பெற்றுக் கொண்டாலும் பலவந்தமாக அதை வைத்துக் கொள்வார்களே தவிர மீண்டும் கொடுக்க மாட்டார்கள்.

 

எனவேதான் எந்தவிதமான அனுபவமும் திட்டமும் இன்றி மக்களை ஏமாற்றுவதற்கு ஆயத்தமாகி வருகின்றனர். 75 ஆண்டு காலப்பகுதியில் அவர்கள் நான்கு அமைச்சுப் பதவிகளை வகித்தனர்.

 

விவசாய அமைச்சராக கடமையாற்றிய அனுரகுமார திசாநாயக்க செய்த ஏதாவது ஒரு வேலை நினைவுக்கு வருகின்றதா? மக்கள் பற்றி பேசுகிறார்கள் இல்லை.

 

எனினும் கடந்த 75 ஆண்டுகளாக பெயர் சொல்லக்கூடிய பல அரசியல்வாதிகள் வரலாற்றில் இடம் பிடித்துள்ளனர்.

 

மகாவலி திட்டம் பற்றி பேசினால் காமினி திசாநாயக்க நினைவுக்கு வருகின்றார், மஹாபொல திட்டம் பற்றி பேசினால் லலித் அத்துலத்முதலி நினைவிற்கு வருகின்றார்.

 

எனவே நன்றாக வேலை செய்த அமைச்சர்கள் இந்த நாட்டில் இருந்தார்கள். அவ்வாறானவர்களின் பெயரை நினைவு படுத்தினால் அவர்கள் செய்த சேவைகளும் நினைவுக்கு வரும்.

 

மக்கள் விடுதலை முன்னணியினர் நான்கு அமைச்சு பதவிகளை வகித்தனர். எனினும் அவர்களால் செய்யப்பட்ட எந்த ஒரு வேலையும் நினைவிற்கு வருவதில்லை. இதுகுறித்து மக்கள் கேள்வி எழுப்ப வேண்டும். எந்த ஒரு வேலையையும் செய்யவில்லை, அவர்கள் செய்யவும் மாட்டார்கள்.

 

மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர்களிடம் பில்லியன் கணக்கான பணம் உண்டு என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அது தொடர்பில் விளக்கம் அளிப்பதற்கு அவர்கள் தயார் இல்லை. தேர்தல் செலவுகள் குறித்து அம்பலப்படுத்தும் சட்டமொன்று கொண்டுவரப்படுவதனை மக்கள் விடுதலை முன்னணி விரும்பவில்லை.

 

சொத்து விவரங்களை வெளிப்படுத்துமாறு மக்கள் விடுதலை முன்னணியிடம் கேட்டால் நாங்கள் குற்றம் செய்யவில்லை அதனால் அந்த தேவை எனக்கு இல்லை என்கின்றார்கள்.

 

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அதிகாரப்பூர்வ இல்லங்கள் வழங்கப்படுவதை எதிர்க்கும் மக்கள் விடுதலை முன்னணியின் சிலர் இன்னமும் நாடாளுமன்ற அதிகாரப்பூர்வ இல்லங்களில் வசித்து வருகின்றனர்.

 

1969 ஆம் ஆண்டு கட்டுநாயக்க கொழும்பு அதிவேக நெடுஞ்சாலை அமைப்பதற்கு டட்லி சேனாநாயக்க அரசாங்கம் முயற்சித்த போது இடதுசாரி கட்சிகள் அதனை எதிர்த்தன. 70களில் முத்தரப்பு இடதுசாரி அரசாங்கம் அந்தத் திட்டத்தை கைவிட்டது.

 

அவ்வாறு செய்யாமல் இருந்திருந்தால் ஆசியாவின் வான் போக்குவரத்து மையமாக இலங்கை மாற்றமடைந்திருக்கும்.

 

அந்தக் கால இடதுசாரிகள் நாட்டுக்கு கிடைக்கவிருந்த பாரிய நலனை இல்லாமல் செய்தனர். பின்னர் அரச சொத்துக்களை அழித்தனர், வீடுகளுக்கு தீ மூட்டினர், மக்களை கொன்றொழித்தனர் இவ்வாறு அழிக்கப்பட்ட அரச சொத்துக்களின் மொத்த பெறுமதி சுமார் 150 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.

 

1994 ஆம் ஆண்டு நான் பல்கலைக்கழகத்தில் அனுமதி பெறுவதற்கு முன்னார் நான்கு ஆண்டுகள் வீட்டிலிருந்து சுமார் 15 லட்சம் இளைஞர் யுவதிகள் இவ்வாறு வீட்டில் இருந்த காரணத்தினால் பொருளாதாரத்தில் பாரியளவு பின்னடைவு ஏற்பட்டது.

 

75 ஆண்டுகள் ஆட்சி செய்ததனால் தமக்கும் ஐந்து ஆண்டுகள் வழங்குமாறு கோருகின்றனர் என்பதனை மக்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

 

அனுபவம் மிக்க, உலகுடன் ஒத்து போகக் கூடிய தலைவர் ஒருவரே தற்போதை தேவைப்பாடாகும். வேலை செய்ய முடியாத அனுபவம் இல்லாத இவ்வாறானவர்கள் குறித்து மக்கள் நம்பிக்கை கொள்ளக் கூடாது நாம் பல்வேறு சந்தர்ப்பங்கள், பாடங்கள் கற்றுக் கொண்டுள்ளோம்.

 

இந்த நாட்டை கட்டி எழுப்பக்கூடிய ஒரே தலைவர் ரணில் விக்ரமசிங்க மட்டுமே என்பதை அவர் உலகிற்கே நிரூபித்துள்ளார்.

 

1988, 1989 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நாம் வீட்டில் இருந்தோம். அச்சமுடன் வீட்டில் இருந்தோம் வெளியே இறங்குவதற்கு அஞ்சினோம் நாம் பேருந்தில் சென்றால் வீடு திரும்புவோமா என்று எமது பெற்றோர் அச்சத்தில் இருந்தார்கள்.

 

எந்த நேரத்தில் கொண்டு சென்று கொலை செய்வார்களோ என்ற அச்சத்தில் இருந்தார்கள். பல்கலைக்கழகத்தில் அரசியல் செய்வதற்கு பல்வேறு தடைகளும் அடக்குமுறைகளும் பிரயோகிக்கப்பட்டன.

 

அதை நாம் கண்கூடாக பார்த்திருக்கின்றோம். இந்த நாட்டில் சுமார் 45 ஆயிரம் முதல் 50 ஆயிரம் இளைஞர் யுவதிகளை கொன்று அடக்குமுறைக்கு உட்படுத்திய மக்கள் விடுதலை முன்னணி ஆட்சி அதிகாரத்தை கொண்டு நடத்த முயற்சிக்கின்றது.

 

இந்த கடந்த கால அனுபவங்கள் மறந்து விட முடியாதவை அந்த அச்சம் இன்னமும் இருக்கின்றது.

 

பாடசாலை அதிபரை கொலை செய்து விட்டு வருமாறு கோரினால் ஏன் என்று கேட்காமல் கொலை செய்து விட்டு வருபவர்களே இருந்தனர்.

அவ்வாறான சோசலிச கொள்கையை எவ்வாறு உருவாக்குவது. 150 பில்லியன் டாலர்கள் நாட்டுக்கு சேதம் விளைவித்த நான்கு ஆண்டுகள் இந்த நாட்டை பின்னோக்கி தள்ளிய மக்கள் விடுதலை முன்னணிக்கு ஆட்சி அதிகாரத்தை வழங்க முடியாது ” என்றார்.

Advertisement

ஜோதிடம்

Rasi Palan new cmp 14 Rasi Palan new cmp 14
ஜோதிடம்6 மணத்தியாலங்கள் ago

​இன்றைய ராசி பலன் 17.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசிபலன் மே 17, 2024, குரோதி வருடம் வைகாசி 4 வெள்ளிக் கிழமை, சந்திரன் சிம்ம ராசியில் சஞ்சரிக்கிறார். தனுசு ராசியில் உள்ள பூராடம், உத்திராடம்...

Rasi Palan new cmp 13 Rasi Palan new cmp 13
ஜோதிடம்1 நாள் ago

இன்றைய ராசி பலன் 16.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசி பலன் 16.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் மே 16, 2024, குரோதி வருடம் வைகாசி...

Rasi Palan new cmp 12 Rasi Palan new cmp 12
ஜோதிடம்2 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 15.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசிபலன் மே 15, 2024, குரோதி வருடம் வைகாசி 2, புதன் கிழமை, சந்திரன் கடகம், சிம்ம ராசியில் சஞ்சரிக்கிறார். விருச்சிகம், தனுசு ராசியில் உள்ள...

Rasi Palan new cmp 11 Rasi Palan new cmp 11
ஜோதிடம்3 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 14.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 14.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் மே 14, 2024, குரோதி வருடம் வைகாசி...

Rasi Palan new cmp 10 Rasi Palan new cmp 10
ஜோதிடம்4 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் 13.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசி பலன் 13.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan நாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசிபலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல்...

Rasi Palan new cmp 9 Rasi Palan new cmp 9
ஜோதிடம்5 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 12.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 12.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் மே 12, 2024, குரோதி வருடம் 29,...

tamilnaadi 1 tamilnaadi 1
ஜோதிடம்6 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 11.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 11.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் மே 11, 2024, குரோதி வருடம் சித்திரை...