இலங்கை

இளம் யுவதியை பார்க்க சென்ற அதிகாரிக்கு அதிர்ச்சி

Published

on

இளம் யுவதியை பார்க்க சென்ற அதிகாரிக்கு அதிர்ச்சி

களுத்துறை, மில்லனிய பகுதியில் சில தினங்களுக்கு முன்னர் நட்புடன் பழகிய யுவதியை சந்திக்க சென்ற விற்பனை ஊக்குவிப்பு அதிகாரி ஒருவர் எதிர்பாராத சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.

யுவதியை சந்திக்க சென்றவரை மில்லனிய பகுதிக்கு மூவர் கொண்ட கும்பல் மிக நுட்பமாக வரவழைத்து அவரை வெறிச்சோடிய வீட்டிற்கு அழைத்துச் சென்று தங்க நகை உள்ளிட்ட பல உடமைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கொள்ளையிடப்பட்ட பொருட்களில் சுமார் 2 பவுன் எடையுள்ள தங்கச் சங்கிலி, ஸ்மார்ட் கையடக்க தொலைபேசி, மோட்டார் சைக்கிள் மற்றும் பணப்பை ஒன்றும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்திற்கு முகங்கொடுத்த நபர் குருநாகல் அலகொலதெனிய பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர் என்பதுடன் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் ஹொரணை பிரதேசத்தில் உள்ள நிறுவனமொன்றில் விற்பனை ஊக்குவிப்பு அதிகாரியாக கடமையாற்ற வந்துள்ளார்.

கடந்த 21ஆம் திகதி ஹொரணை மாநகர சபை விளையாட்டரங்கில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியில் இணைந்து கடையொன்றையும் திறந்து வைத்துள்ளார்.

அதன் பின்னர் அந்த அரங்கின் கண்காட்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போது அருகில் இருந்த கடையில் பணியாற்றிய யுவதி ஒருவருடன் நட்பை ஏற்படுத்திக் கொண்டதாக கூறப்படுகிறது.

அந்த நட்பின் அடிப்படையில் அந்த இடத்தில் அவரது உறவினர் ஒருவரும் அடையாளம் காணப்பட்டதையடுத்து அந்த நபர் விற்பனை ஊக்குவிப்பு அதிகாரியின் தொலைபேசிக்கு தொடர்பு கொண்டு யுவதியை சந்திப்பதற்காக மில்லனிய பகுதிக்கு வருமாறு தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, விற்பனை ஊக்குவிப்பு அதிகாரி மில்லனிய பகுதி சென்ற போது மோட்டார் சைக்கிளின் பின்னால் பயணித்த நபர் திடீனை கழுத்தில் கத்தியை காட்டி மிரட்டியதுடன் தான் கூறும் இடத்திற்கு செல்லுமாறு அச்சுறுத்தியுள்ளனர்.

சிறிது தூரம் சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவரை மில்லனிய பகுதியில் உள்ள ரப்பர் தோட்டத்தில் உள்ள வெறிச்சோடிய வீட்டிற்கு அழைத்துச் சென்று அடித்து, அவர் அணிந்திருந்த தங்க நகை உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்து சென்றதாக பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

அத்துடன் அந்த நபர்கள் அதிகாரியின் சொந்த மோட்டார் சைக்கிளில் ஹொரண நகருக்கு தப்பிச் சென்றுள்ளனர். பின்னர் விற்பனை ஊக்குவிப்பு உத்தியோகத்தர் ஹொரண ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ஒரு நாள் கழித்து வைத்தியசாலையை விட்டு வெளியேறி மில்லனிய பொலிஸில் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

முறைப்பாடு கிடைத்தவுடன் உடனடியாக செயற்பட்ட மில்லனியா பொலிஸ் அதிகாரிகள் யுவதியின் வீட்டை சோதனையிட்டு விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version