இலங்கை

அமெரிக்காவிற்கு அனுப்புவதாக பாரிய மோசடி செய்த தம்பதி

Published

on

அமெரிக்காவிற்கு அனுப்புவதாக பாரிய மோசடி செய்த தம்பதி

அமெரிக்காவில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி தனது மனைவியுடன் இணைந்து சுமார் 42 லட்சம் ரூபாவை மோசடி செய்த இராணுவ மேஜர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாணந்துறை கோரக்கான பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சந்தேகத்திற்குரிய மேஜர் யாழ்ப்பாணம் முகமாலை மிரிசுவல் பகுதியில் உள்ள முகாமில் பணியாற்றுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாணந்துறை வடக்கு பொலிஸ், பாணந்துறை தெற்கு, தெஹிவளை, பாணந்துறை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு உட்பட பல பொலிஸ் நிலையங்களுக்கு கிடைத்த 6 முறைப்பாடுகளின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரான மேஜர் கடந்த 10ம் திகதி விடுமுறையில் வீடு திரும்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பல்வேறு நபர்களிடம் இருந்து மனைவி பெற்ற பணம் மேஜரின் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளதாக விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் மேஜரின் மனைவியும் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேக நபர் பாணந்துறை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Exit mobile version