இலங்கை

கிரிந்தி ஓயாவில் அதிகரிக்கும் நீர்மட்டம்

Published

on

கிரிந்தி ஓயாவில் அதிகரிக்கும் நீர்மட்டம்

வெல்லவாயவிலிருந்து தனமல்வில ஊடாக லுணுகம்வெஹர நீர்த்தேக்கத்திற்கு பாயும் கிரிந்தி ஓயாவின் நீர்மட்டம் வெல்லவாய பிரதேசத்தில் வேகமாக அதிகரித்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனால், கிரிந்தி ஓயாவின் இருபுறங்களிலும் உள்ள மக்கள் இது தொடர்பில் அவதானம் செலுத்துமாறும் நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.

மொனராகலை மாவட்டத்தின் ஊடாக பாயும் கிரிந்தி ஓயாவின் மேல் பகுதியில் கடந்த சில மணித்தியாலங்களில் கடும் மழை பெய்துள்ளது.

இதன் காரணமாக வெல்லவாய பிரதேசத்தில் கிரிந்தி ஓயாவின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகின்றது.

மேலும், வெல்லவாய பகுதிக்க அருகில் உள்ள தாழ்நிழப்பகுதிகளில் உள்ள மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலை குறித்து மக்கள் தேவையில்லாமல் கவலைப்பட வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரிந்தி ஓயா ஊடாக செல்லும் வீதிகளைப் பயன்படுத்தும் போது மிகவும் அவதானமாக இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் மேலும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Exit mobile version