இலங்கை

சுற்றுலா விடுதியொன்றில் பொலிஸாரிடம் சிக்கிய இளம் ஜோடிகள்

Published

on

சுற்றுலா விடுதியொன்றில் பொலிஸாரிடம் சிக்கிய இளம் ஜோடிகள்

வத்தளை – ஹுனுபிட்டிய பிரதேசத்தில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் ஐஸ் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்ட நான்கு இளம் ஜோடிகளை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

மேலும், குறித்த சந்தேகநபர்களுக்கு விடுதியறையை வழங்கிய முகாமையாளரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக ஜா-ஏல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் இருந்து 3500 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

கலால் நிலையத்திற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த விடுதி சோதனை செய்யப்பட்டதாகவும், இதன்போதே சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 20-30 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும், யுவதிகள் அனுராதபுரம், களனி, வத்தளை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர்களுடன் இருந்த இளைஞர்கள் கஸ்பேவ, தம்புள்ளை, எம்பிலிப்பிட்டிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

இந்நிலையில், குறித்த இளம் ஜோடிகள் முகப்புத்தகம் மூலம் ஒருவரையொருவர் தொடர்பை மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதன்படி கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களை அனைவரும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர் என ஜா- எல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version