இலங்கை

தூத்துக்குடி – காங்கேசன்துறை கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்

Published

on

தூத்துக்குடி – காங்கேசன்துறை கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்

இந்தியாவின் தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

குறித்த சேவை ஆரம்பிக்கப்பட்டு இடையில் கைவிடப்பட்டது. இந்நிலையில், தற்போது சிறிய வகுப்பு பயணிகள் கப்பல் போக்குவரத்தை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இரண்டு நிறுவனங்கள் கப்பல் போக்குவரத்தை ஆரம்பிக்க விருப்பம் தெரிவித்துள்ளன.

அத்துடன், குறித்த நிறுவனங்கள் இலங்கையில் அனுமதி பெறும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தை மையமாக கொண்டு பல்வேறு இடங்களுக்கு கப்பல் போக்குவரத்தை ஆரம்பிக்க தனியார் நிறுவனம் ஒன்று முன்வந்துள்ளது.

மேலும், தூத்துக்குடியில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறை, தூத்துக்குடி – கொழும்பு ஆகியே இடங்களுக்கே இந்த சேவைகள் இடம்பெறவுள்ளன.

கடந்த 17ம் திகதி முதல் 19ம் திகதி வரை மும்பாயில் நடைபெற்ற சர்வதேச கடல்சார் உச்சி மாநாட்டில் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version