இலங்கை

தென்னிலங்கையில் ஹோட்டலுக்கு நடந்த பரபரப்பு

Published

on

தென்னிலங்கையில் ஹோட்டலுக்கு நடந்த பரபரப்பு

ஹொரண பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்குள் புகுந்த சிலர், அங்கு உணவருந்திக் கொண்டிருந்த பெண் ஒருவரை பலவந்தமாக கடத்திச் சென்றுள்ளனர்.

பண்டாரகம பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளார்.

எனினும், கடத்தல் சம்பவம் தொடர்பில் ஹோட்டல் ஊழியர்கள் பொலிஸ் அவசர இலக்கத்தின் ஊடாக பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

அதற்கமைய, உடனடியாக செயற்பட்ட ஹொரணை பொலிஸ் அதிகாரிகள், கடத்தப்பட்ட பெண்ணை சுமார் 3 மணித்தியாலங்களில் கண்டுபிடித்துள்ளனர். அத்துடன், கடத்தலுக்கு வந்தவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பண்டாரகம, அங்குருவத்தோட்ட வீதியில் லெனவர உயன பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்த போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Exit mobile version