இலங்கை

புதிதாக நடைமுறைக்கு வரும் 5 திருத்த சட்டமூலங்கள்

Published

on

புதிதாக நடைமுறைக்கு வரும் 5 திருத்த சட்டமூலங்கள்

அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஐந்து சட்டமூலங்களில் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தியுள்ளார்.

குறித்த சட்டமூலங்கள் இன்று (17.10.2023) முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதற்கமைய, 2023 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தம்) சட்டம், 2023 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டம், 2023 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்க இலங்கை தேசிய கண் வங்கி நம்பிக்கைப் பொறுப்பு சட்டம், 2023 ஆம் ஆண்டின் 23 ஆம் இலக்க இலங்கைத் துறைமுக அதிகாரசபை (திருத்தம்) சட்டம் மற்றும் 2023 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க குடியியல் வான்செலவு (திருத்தம்) சட்டங்களே நடைமுறைக்கு வருகின்றன.

Exit mobile version