இலங்கை

இலங்கையின் உத்தேச சட்டங்கள் தொடர்பில் ஐ.நா கவலை

Published

on

இலங்கையின் உத்தேச சட்டங்கள் தொடர்பில் ஐ.நா கவலை

இலங்கை அரசாங்கத்தின் இரண்டு உத்தேச சட்ட வரைவுகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை தனது கரிசனையை வெளியிட்டுள்ளது.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மற்றும் இணைய பாதுகாப்புச் சட்டம் ஆகிய உத்தேச சட்ட வரைவுகள் குறித்து கரிசனை வெளியிடப்பட்டுள்ளது.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மிதமிஞ்சிய அதிகாரத்தை வழங்கும் வகையிலானது எனவும், மனித உரிமைகளை வரையறுக்கும் வகையிலானது எனவும் சர்வதேச சட்ட திட்டங்களுக்கு உட்படவில்லை எனவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் பேச்சாளர் ரவீனா ஷம்தாசானி தெரிவித்துள்ளார்.

இந்த சட்டத்தின் மூலம் அமைதியாக ஒன்று கூடுதல் மற்றும் கருத்துச் சுதந்திரத்திற்கு இடையூறுகள் ஏற்படக் கூடும் என அவர் அச்சம் வெளியிட்டுள்ளார்.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவில் பயங்கரவாதம் என்ற பதம் விரிவாக வரைவிலக்கணப்படுத்தபட்டுள்ளதாகவும், இதனால் பல்வேறு தரப்பினரையும் நிறுத்தி விசாரணை நடத்தி கைது செய்யும் அதிகாரம் பொலிஸாருக்கு கிடைக்கும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இணைய பாதுகாப்புச் சட்ட வரைவின் உள்ளடக்கமானது கருத்துச் சுதந்திரத்தினை பாதிக்கும் வகையிலானது என மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version