இலங்கை

ஜனாதிபதி ரணில் விடுத்துள்ள உத்தரவு

Published

on

ஜனாதிபதி ரணில் விடுத்துள்ள உத்தரவு

நாட்டில் நிலவிய அடைமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் சேதமடைந்த சகல வீதிகளையும் சீர்செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

மத்திய அதிவேக நெடுஞ்சாலை உள்ளிட்ட அனைத்து நெடுஞ்சாலைத் திட்டங்களையும் துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி ரணில் இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.

இதேவேளை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளும் இன்று முதல் கல்விக்காக திறக்கப்படும் என தென் மாகாண கல்வி செயலாளர் ரஞ்சித் யாப்பா தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், வெள்ளத்தினால் சேதமடைந்த பாடசாலைகளின் நிலைமையை ஆராய்ந்து அது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுப்பது அதிபர்களிடமே இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக அந்த மாவட்டங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் இரண்டு நாட்களுக்கு மூடுவதற்கு கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

தற்போது வழமை நிலைக்கு திரும்பியுள்ளதால் பாடசாலைகளை மீண்டும் திறக்க தீர்மானிக்கப்பட்டதாக தென் மாகாண கல்விச் செயலாளர் தெரிவித்தார்.

Exit mobile version