இலங்கை

தென்னிலங்கையில் வன்முறையின் பின்னணியில் கோட்டாபய

Published

on

தென்னிலங்கையில் வன்முறையின் பின்னணியில் கோட்டாபய

தென்னிலங்கையில் இடம்பெற்ற பல வன்முறைச் செயல்களுக்குப் பின்னணியில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான குழுவினரே செயற்பட்டதாக முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இணைய சேனலுடன் கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்ட அவர், இராணுவ புலனாய்வு உறுப்பினர்கள் பொதுவாக இது தொடர்பில் குற்றம் சுமத்தக்கூடாது என குறிப்பிட்டுள்ளார்.

தான் இராணுவத் தளபதியாக செயற்பட்ட போது கொழும்பில் சில நடவடிக்கைகளுக்கு நேரடியாக உத்தரவு வழங்கவில்லை எனவும் அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவே வழங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரச புலனாய்வுப் பிரிவின் தலைவரான மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயும் சம்பந்தப்பட்ட குழுவில் இடம்பெற்றிருந்ததாக பொன்சேகா வெளிப்படுத்துகிறார்.

Exit mobile version