இலங்கை

வடக்கு கிழக்கு கதவடைப்பு போராட்டம்! பொதுமக்களுக்கு அழைப்பு

Published

on

வடக்கு கிழக்கு கதவடைப்பு போராட்டம்! பொதுமக்களுக்கு அழைப்பு

கதவடைப்பு போராட்ட திகதி தொடர்பாக இறுதி முடிவு செய்வதற்கான கலந்துரையாடல் தமிழ் கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்களுடன் நடைபெறவுள்ளது.

யாழ்ப்பாணம் – தந்தை செல்வா அரங்கில், நாளை திங்கட்கிழமை (09.10.2023) மாலை 3 மணிக்கு இக் கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.

குறித்த கலந்துரையாடலில் சமூக ஆர்வலர்கள், தமிழ் உணர்வார்கள், பொது அமைப்புகள் என்பன கலந்து கொண்டு போராட்ட திகதி தொடர்பில் கருத்துக்களை முன்வைக்க முடியும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜா உயிரச்சுறுத்தல், மனஅழுத்தம் காரணமாக நாட்டை விட்டு வெளியேறியதாக குறிப்பிட்ட சம்பவம் தொடர்பில் முழுமையான நீதிவிசாரணை நடத்த வலியுறுத்தியும், நீதித்துறையில் இருந்தாலும் தமிழர் என்பதால் இன ஒடுக்குமுறைக்குள்ளாகுவதை சுட்டிக்காட்டியும் கண்டித்தும் தமிழ் தேசிய கட்சிகள் கதவடைப்பு போராட்டத்தை நடத்தவுள்ளன.

இந்நிலையில் நீதிபதி விவகாரம் தொடர்பில் சர்வதேச நாடுகளுக்கு கையளிப்பதற்கான மகஜரில் எவ்வாறான விடயங்களை உள்ளடக்க வேண்டும் என்பதிலும் நாளை இறுதி முடிவு எடுக்கப்படும்.

ஆகவே இதனை தனிப்பட்ட அழைப்பாக ஏற்று சமூக ஆர்வலர்கள், தமிழ் உணர்வார்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Exit mobile version