இலங்கை
ரணில் ரணில் போ போ..! கடும் கோஷத்தோடு வீதிக்கு இறங்கிய மக்கள்
ரணில் ரணில் போ போ..! கடும் கோஷத்தோடு வீதிக்கு இறங்கிய மக்கள்
மட்டக்களப்பு மயிலத்தமடு, மாதவனை பண்ணையாளர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
இந்த நிலையில் போராட்டக்களத்தில் உள்ளவர்கள் ரணில்.. ரணில்.. போ போ.. மயிலத்தமடு மாதவனை எங்களுக்கு வேண்டும் என கடுமையாக கோஷம் எழுப்பி வருகின்றனர்.
பொலிஸாருக்கும் – போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளவர்கள், பொலிஸாரின் தடுப்பை மீறி செல்ல முற்பட்ட நிலையில் அதனை தடுக்கும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
களத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் உள்ளிட்டோர் இருப்பதுடன் எதிர்ப்புக்களை வெளியிட்டு வருகின்றனர்.
மேலும், பொலிஸாரின் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும், இல்லையேல் கைது செய்யப்படுவீர்கள் என ஒலிபெருக்கி மூலம் போராட்டக்காரர்களுக்கு அறிவிக்கப்பட்டு வருகின்றது. எனினும், போராட்டக்காரர்கள் தங்களது எதிர்ப்பை தொடர்ந்தும் வெளியிட்டு வருகின்றனர்.
மட்டக்களப்பு – மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்களது போராட்டம் வலுப்பெற்று வருகின்றது.
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் தங்களது கடும் எதிர்ப்புக்களை வெளியிட்டு வருகின்றனர்.