இலங்கை

ஏறாவூர் பொலிஸ் சார்ஜன் மரணம்: திடுக்கிடும் தகவல்

Published

on

ஏறாவூர் பொலிஸ் சார்ஜன் மரணம்: திடுக்கிடும் தகவல்

கடந்த 30 ஆம் திகதி வெலிக்கந்தை பொலிஸ் நிலையத்தில் மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியைச் சேர்ந்த பொலிஸ் சார்ஜன் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

கடந்த ஆறு மாதங்களாக வெளிக்கந்தை பொலிஸ் நிலையத்தில் கடமை புரிந்து வந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான எம். எம். ஹனிபா என்பவரே இவ்வாறு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

கடமையில் இருந்த பொலிஸ் சார்ஜன் ஹனிபா 30ஆம் திகதி இரவு நேர கடமையில் இருந்துள்ளார்.

அதிகாலை 3 மணியளவில் சிறிது நேரம் ஓய்வெடுப்பதற்காக தனது பொலிஸ் நிலையத்தில் உள்ள விடுதிக்கு சென்றவர் காலையில் இரத்த காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலமாக மீட்கப்பட்டுள்ள பொலிஸ் சார்ஜன் இதய வலியின் காரணமாக கண்ணாடியின் மேல் விழுந்து உயிரிழந்து உள்ளதாக குடும்பத்தினருக்கு தகவல் வழங்கப்பட்டிருந்தது.

எனினும் நான்கு நாட்களின் சடலத்தை உடற் கூற்று பரிசோதனை செய்த சட்ட வைத்திய அதிகாரி உயிரிழந்த பொலிஸ் சார்ஜன் கூறிய ஆயுதத்தால் குத்தப்பட்டு மரணிக்கப்பட்டு இருக்காலாம் எனவும் கத்தி போன்ற ஒரு கூறிய ஆயும் பாவிக்கபட்டு இருக்கலாம் எனவும் திடுக்கிடும் அதிர்ச்சி தகவலை வழங்கியிருந்தார்.

இந்நிலையில், தனது தந்தை கூறிய ஆயுதத்தால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் அது ஒரு கத்தியால் குத்திருக்கலாம் என உடல் கூற்று மருத்துவ பரிசோதனை அறிக்கை தெரிவிப்பதன் காரணமாக தனது தந்தை பொலிஸ் நிலையத்திலேயே வைத்து கொலை செய்யப்பட்டுள்ளதாக உயிரிழந்தவரின் மகன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

மேலும், நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் கடந்த 35 தொடக்.40 வருடங்களாக பொலிஸ் சேவையில் இருந்த தனது தந்தையின் இழப்பிற்கும் மரணத்திற்கு ஒரு சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் இந்த நாட்டில் பொலிஸருக்கும் பாதுகாப்பு இல்லாத ஒரு நிலை உருவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version