இலங்கை

யாழில் தவறான முடிவெடுத்து பெண் உயிரிழப்பு

Published

on

யாழில் தவறான முடிவெடுத்து பெண் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் – ஆனைப்பந்தி பகுதியில் குழந்தை பிறந்து 20 நாள்கள் கடந்துள்ள நிலையில் தவறான முடிவெடுத்து பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (02.10.2023) இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

யாழ். ஆனைப்பந்தியைச் சேர்ந்த 40 வயதான பெண்ணுக்கு திருமணமாகி எழு ஆண்டுகளின் பின்னர் குழந்தை பிறந்துள்ளது.

அக் குழந்தை பிறந்து 20 நாள்கள் கடந்துள்ள நிலையில், தாய்ப்பால் சுரக்கவில்லை என்ற மன அழுத்தத்தில் குறித்த பெண் இருந்துள்ளாரெனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையிலேயே அவர் நேற்று தவறான முடிவு எடுத்து உயிரிழந்துள்ளார்.

மரண விசாரணைகளை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி வின்சன் தயான் அன்ரலா மேற்கோண்டுள்ளார்.

Exit mobile version