இலங்கை
இலங்கையில் நீதித்துறை செயலிழந்து இருக்கிறது
இலங்கையில் நீதித்துறை செயலிழந்து இருக்கிறது
நாட்டில் காணப்படும் பௌத்த பேரினவாதிகளால் நீதித்துறை செயலிழந்து இருக்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற அமர்வில் இன்றையதினம் (03.10.2023) கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,
ஒரு கட்டுமானப்பணியை கட்ட வேண்டாம் என நீதிபதி உத்தரவிட்டபோதும் பேரிணவாத எண்ணங்களோடு சென்ற பிக்குமார்களும் சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்களும் அந்த விகாரைகளை கட்டி முடித்திருக்கிறார்கள்.
இதன் மூலமாக இலங்கையினுடைய நீதித்துறை செயலிழந்து இருப்பது தெரியவருகிறது. இந்த நாட்டில் இருக்கின்ற பேரிணவாத செயற்பாட்டாளர்களுக்கு இந்த அரசாங்கம் ஒரு தகுந்த நடவடிக்கையை எடுக்கவில்லை என தெரிவித்துள்ளார்.