இலங்கை
இலங்கையின் 33 பால் பண்ணைகளை இந்திய நிறுவனத்திற்கு விற்பனை
இலங்கையின் 33 பால் பண்ணைகளை இந்திய நிறுவனத்திற்கு விற்பனை
தேசிய கால்நடை அபிவிருத்திச் சபைக்கு சொந்தமான மில்கோ (Milco) மற்றும் ஹைலண்ட் (Highland) உட்பட 33 பால் பண்ணைகளை விற்பனை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க குற்றஞ்சாட்டியுள்ளார்.
இலங்கையின் பால் பண்ணைகள் இந்தியாவின் அமுல்(Amul) பால் நிறுவனத்திற்கு விற்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மில்கோவை விற்பனை செய்வதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ள போதிலும் ‘ஹைலேண்ட்’ நிறுவனத்தை விற்பனை செய்வதற்கான அமைச்சரவை முன்மொழிவு இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதுமட்டுமன்றி உத்தேச திட்டத்தின் கீழ் (NLDB)க்கு சொந்தமான 21 பால் பண்ணைகளில் அதிககம, ரிதியகம, நாரம்மல மற்றும் பொலன்னறுவை பால் பண்ணைகள் விற்பனை செய்யப்பட உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இதற்காக இரண்டு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அனுர குமார திஸாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.