இலங்கை

சர்ச்சைக்குரிய மின்சார கட்டணம்

Published

on

சர்ச்சைக்குரிய மின்சார கட்டணம்

சனத் நிஷாந்த தனது மின்சார கட்டணத்தை செலுத்தியமை தொடர்பில் தொலைபேசியில் தெரிவித்ததையடுத்து தமக்கு தெரியவந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சனத் நிஷாந்த செலுத்திய மின்சாரக் கட்டணம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தனது பெயரில் இதுவரை மின்சாரக் கட்டணம் பெறவில்லை அல்லது செலுத்தியதில்லை என நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

சனத் நிஷாந்த மின்சார சபைக்கு சென்று வினவிய போது நாமல் ராஜபக்சவின் பெயரில் மின்சாரக் கட்டணம் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆனால் சனத் நிஷாந்த திருமண வைபவம் தொடர்பான கட்டணத்தை செலுத்தியுள்ளதாக நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

பயங்கரவாதத்தை ஒழித்து நாட்டை அபிவிருத்தி செய்த மகிந்த ராஜபக்சவுக்கு மரியாதை மற்றும் நன்றியை தெரிவிக்கும் வகையில் இந்த கட்டணத்தை செலுத்தியதாகவும் சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார்.

Exit mobile version