இலங்கை
இலங்கை புலனாய்வுத்துறையை முறியடித்த மற்றுமொரு புலனாய்வுத்துறை!
இலங்கை புலனாய்வுத்துறையை முறியடித்த மற்றுமொரு புலனாய்வுத்துறை!
இலங்கை புலனாய்வுத் துறையை விட, வேறொரு புலனாய்வுத் துறை உள்ளுக்குள், மிக வேகமாக, காத்திரமாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது என பிரித்தானியாவில் இருக்கும் இராணுவ ஆய்வாளர் அரூஸ் தெரிவித்துள்ளார்.
நீதிபதி சரவணராஜாவை நாட்டில் இருந்து வெளியேற்றுவதில் இந்த புலனாய்வுத் துறை, இலங்கை புலனாய்வுத் துறையை முறியடித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இலங்கையின் புலனாய்வுத் துறைக்கு உள்ளேயே மற்றொரு புலனாய்வு கட்டமைப்பு வலுவாக செயற்படுகின்றது.
அந்த புலனாய்வுத் துறை என்பது இலங்கை அரசினுடைய புலனாய்வுத் துறையை விட வேகமாக செயற்படுகின்றது என்றால் இவர்கள் என்ன செய்யப் போகின்றார்கள் என்பதை அவர்கள் முன்கூட்டியே அறிந்துள்ளார்கள் என்று அர்த்தம்.
நீதிபதி சரவணராஜா கண்காணிக்கப்பட்டதை நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் கூற்று உறுதிப்படுத்தியுள்ளது என்றும் கலாநிதி அரூஸ் குறிப்பிட்டார்.