இலங்கை

அரச பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்

Published

on

அரச பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்

அநுராதபுரத்திலிருந்து கொழும்பு நோக்கிச் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தின் நடத்துனர் ஒருவர் கெக்கிராவையில் வைத்து தாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கெக்கிராவ பொது விளையாட்டு மைதானத்துக்கு அருகில் வைத்து பேருந்தை மறித்து தாக்கிய இருவர் நடத்துனரிடம் இருந்த பயணச்சீட்டு வழங்கும் இயந்திரத்தையும் சேதப்படுத்தியதாக கெக்கிராவ பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்நிலையில், சம்பவ இடத்துக்குச் சென்ற இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சந்தேக நபர்களைக் கைது செய்ய முற்பட்டபோது சந்தேக நபர்கள் அவ்விடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பேருந்து அநுராதபுரத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றபோது கெக்கிராவ பொது மைதானத்துக்கு அருகில் வந்த இருவர், பேருந்தை மறித்து நடத்துனரை தாக்கி, அவரிடமிருந்த பயணச்சீட்டு இயந்திரத்தை சேதப்படுத்திய பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர் என்று தாக்குதலுக்குள்ளான நடத்துனர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கெக்கிராவ பொலிஸார் முன்னெடுத்து வருவதாக கூறப்படுகிறது.

Exit mobile version