இலங்கை
இலங்கை மக்களின் உரிமைகள் தொடர்பில் அமெரிக்கா கவலை
இலங்கை மக்களின் உரிமைகள் தொடர்பில் அமெரிக்கா கவலை
இணைய பாதுகாப்பு சட்டமூலம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் ஊடாக பொதுமக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை இலங்கை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் கோரிக்கை விடுத்துள்ளார் .
இலங்கை அரசு இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் குறித்து ஆராய்ந்து வரும் நிலையில், தொழில்நுட்பத்துறையினர், சிவில் சமூகத்தினர் மற்றும் பல தரப்பட்ட நிபுணர்களின் கருத்தை உள்வாங்குவது அவசியம் என்றும் அமெரிக்கத் தூதுவர் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார் .
இதேவேளை, பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை சர்வதேச தரம் மற்றும் ஏனைய ஜனநாயக நாடுகளின் சிறந்த நடைமுறைகளுக்கு ஏற்ப திருத்தியமைக்க இலங்கை அரசு வழங்கிய உறுதி மொழியை நிறைவேற்றுமாறும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் வலியுறுத்தியுள்ளார்.