இலங்கை
இலங்கையில் எரிபொருள் விலையில் மாற்றம்
இலங்கையில் எரிபொருள் விலையில் மாற்றம்
ஒக்டோபர் மாதத்திற்கான எரிபொருள் விலை திருத்தம் நாளைய தினம் (02) மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விலை திருத்தம் நாளை இரவு அறிவிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
விலை சூத்திரத்தின்படி, ஒவ்வொரு மாதமும் முதலாம் திகதி எரிபொருள் விலையில் திருத்தம் செய்யப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில், இந்த மாதத்திற்கான எரிபொருள் விலை திருத்தம் நாளை அறிவிக்கப்பட்டு அதன் பின்னர் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விலை சூத்திரத்தின்படி, கடந்த மாதம் எரிபொருள் விலையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.