இலங்கை
தமிழர் பகுதியில் எரியும் வைத்தியசாலை
தமிழர் பகுதியில் எரியும் வைத்தியசாலை
திருகோணமலை– தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் இன்று (01.10.2023) தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
வெளி நோயாளர் பிரிவு மற்றும் மருந்தகம் போன்ற பகுதிகளே தீப்பற்றி உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
காலை ஆறு மணி அளவில் சத்தமொன்று கேட்டதாகவும் பின்னர் தீப்பற்றியதாகவும் அயலவர்கள் தெரிவிக்கின்றனர்.
வைத்தியசாலையில் நோயாளர்கள் எவருக்கும் பாதிப்பு இல்லை எனவும் தீப்பற்றியமைக்காண காரணம் இதுவரை வெளியாகவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பான விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.