இலங்கை

பிள்ளையானும் பதிலளிக்கவில்லை:கருணா அதிருப்தி

Published

on

பிள்ளையானும் பதிலளிக்கவில்லை:கருணா அதிருப்தி

நீங்கள் என்னை பயன்படுத்திவிட்டு எனக்கு எந்த உதவியும் செய்யவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மீது கருணா என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

மிலாத் நபி திருநாளிற்கு அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச டுவிட்டர் பதிவொன்றினை பதிவிட்டிருந்தார்.

அதில் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் போதனைகள், அன்பானவர்களாகவும், அதிக இரக்கமுள்ளவர்களாகவும், பகிரப்பட்ட மனித நேயத்தில் ஒன்றுபடவும் நம்மை ஊக்குவிக்கட்டும் என பதிவிட்டிருந்தார்.

இந்த பதிவிற்கு விநாயகமூர்த்தி முரளிதரன் டுவிட்டரில் பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் பதிவிட்டுள்ளதாவது,”நான் இன்று மகிழ்ச்சியாக இல்லை.நீங்கள் என்னை பயன்படுத்திவிட்டு எனக்கு எந்த உதவியும் நீங்கள் செய்யவில்லை. நான் தினமும் குடிக்கிறேன். உங்களுக்கு இப்போது மகிழ்ச்சி தானே.

பிள்ளையானும் எனது தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிப்பது இல்லை. நான் மிகவும் சோகமாக உள்ளேன்.” என பதிவிட்டுள்ளார்.

Exit mobile version