இலங்கை

“காதலி” வாழை! யாழ் கலந்துரையாடலில் வினோதம்

Published

on

“காதலி” வாழை! யாழ் கலந்துரையாடலில் வினோதம்

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற அபிவிருத்தி கலந்துரையாடலில் “கதலி” வாழைக்கு பதிலாக “காதலி,” வாழை என திரையில் தோன்றியுள்ளது.

யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற உயர்மட்ட கலந்துரையாடலில் இவ்வாறான கருத்துப் பிழையான பொருள் கோடல்கள் இடம்பெறுவது பிரதம திட்டமிடல் கிளையினரின் பிழை என கூறப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி கலந்துரையாடல் கடந்த இரு மாதங்களாக கூட்டத்திற்கான திகதி அமைச்சர் டக்ளாஸ் தேவானந்தாவின் கொழும்பு சந்திப்புக்களின் நிமித்தம் பிற்போடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையிலும் கூட ஏற்கனவே தயாரிக்கப்பட்ட விடயதானங்கள் கூட்டத் திகதிகள் பிற்போடப்பட்டும் எழுத்துப் பிழைகள் மீண்டும் மேற்பார்வை செய்யவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், தவறுகள் விடுவது மனித இயல்பு ஆனால் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற உயர்மட்ட கலந்துரையாடலில் இவ்வாறான கருத்துப் பிழையான பொருள் கோடல்கள் இடம்பெறுவது பிரதம திட்டமிடல் கிளையினர் தாங்கள் பெற்றுக்கொண்ட விடயங்களை உயர் கலந்துரையாடல் ஒன்றுக்கு சமர்ப்பிக்கும் போது திரும்ப மேற்பார்வை செய்யவில்லையா என்றும் பொது மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Exit mobile version