இந்தியா
ஒரே வாரத்தில் இறங்கிய தங்கம் விலை!
ஒரே வாரத்தில் இறங்கிய தங்கம் விலை!
தொடர்ந்து ஏற்ற இறங்கத்தில் இருந்து வந்த தங்கம் விலையானது கடந்த நான்கு நாட்களாக குறைந்து வருகின்றமை நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் சென்னையில் கடந்த 4 நாட்களில் யில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1040 குறைந்துள்ளது.
அந்தவகையில் சென்னையில் நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்த நிலையில் இன்று மீண்டும் அதிரடியாக குறைந்துள்ளது.
அதன்படி, 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து ஒரு கிராம் ரூ.5,330ஆகவும், சவரனுக்கு ரூ.240 குறைந்து ஒரு சவரன் ரூ.42,880 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.24 குறைந்து ஒரு கிராம் ரூ.4,391 ஆகவும், சவரனுக்கு ரூ.192 குறைந்து ஒரு சவரன் ரூ.35,128 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை மட்டும் அதிரடியாக கிராமுக்கு ரூ.1.50 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.76.00 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.76,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.