அரசியல்

IMF நிபந்தனையை செயற்படுத்தினால் ஊழலை தடுக்கலாம்

Published

on

IMF நிபந்தனையை செயற்படுத்தினால் ஊழலை தடுக்கலாம்

அரச கொடுக்கல் வாங்கல்கள் அனைத்தும் வெளிப்படைத்தன்மையுடன் முன்னெடுத்தால் அரச நிர்வாகத்தில் இடம்பெறும் ஊழலை தடுக்க முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இருப்பினும் சர்வதேச நாணய நிதியம் முன்வைத்த நிபந்தனையை அரசாங்கம் செயற்படுத்தவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் பொருளாதார பாதிப்புக்கு தீர்வு காண்பதாக குறிப்பிட்டுக் கொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முழு உலகத்தையும் வலம் வருகிறார். ஆனால் பொருளாதார பாதிப்புக்கு இதுவரை தீர்வு எட்டப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version