இலங்கை

சனல் 4 பொய்! மீண்டும் சர்ச்சை நிலை

Published

on

சனல் 4 பொய்! மீண்டும் சர்ச்சை நிலை

சனல் 4 நிறுவனம் வெளியிட்ட அனைத்தும் பொய்யா என நாம் கேட்க விரும்புகின்றோம் என்று பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

புலனாய்வு பிரிவின் பிரதானி மேஜனர் ஜெனரல் சுரேஷ் சலேவிற்கும், உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி எனக் கூறப்படும் சஹ்ரான் ஹாசிமிற்கும் இடையில் தொடர்பு இருந்ததாகவும், அவர்கள் இருவரும் சந்தித்துக் கொண்டதாகவும் பெரிதாக கூச்சலிட்டனர்.

இறுதியில் கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதியாக்குவதற்கும் மொட்டு கட்சியினர் ஆட்சியை உறுதிப்படுத்துவதற்கும் ராஜபக்சவினர் செய்த செயலே இது என நிரூபிப்பதற்கு பலர் முயற்சி செய்தனர்.

எதிர்க்கட்சியினர் அனைவரும் ஒன்றிணைந்து எம்மீது சேறு பூசுவதற்கு பாரியளவில் முயற்சி செய்தனர்.

சலேவுடனோ, அல்லது இது தொடர்பிலோ எவ்வித தொடர்பும் இல்லையென சனல் 4 நிறுவனத்தின் பணிப்பாளரும், நிறைவேற்று பணிப்பாளரும் ஏற்றுக் கொண்டுள்ளனர். எனவே இதுவும் பொய்யா என நாம் வினவுகின்றோம்.

அனைத்தையும் அங்கும் இங்கும் தாக்கி ராஜபக்சர்களை தாக்குவதற்கே முயற்சிக்கின்றனர். ராஜபக்சர்களின் மூலமே நாம் இன்று சுவாசிக்கும் நிலைமை உருவாகியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version