இலங்கை

இலங்கையில் கட்டாயமாக்கப்படும் நடைமுறை

Published

on

இலங்கையில் கட்டாயமாக்கப்படும் நடைமுறை

இலங்கையில் நான்கு வயது பூர்த்தியாகும் குழந்தைகளுக்கு முன்பருவக் கல்வி கட்டாயமாக்கப்படும் என கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார்.

பத்தரமுல்லையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், முன்பருவக் கல்விக்கான கட்டணம் செலுத்த முடியாத குழந்தைகள் தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கும்.

தேவையின் அடிப்படையில் இடவசதி உள்ள தொடக்க பாடசாலைகளில் முன் குழந்தை பருவ மேம்பாட்டு மையங்களை நடத்தலாம்.

இது மூடப்படும் அச்சுறுத்தலை எதிர்நோக்கும் பாடசாலைகளுக்கு தீர்வாக அமையும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

Exit mobile version