இலங்கை
அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட மகிந்தானந்த
அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட மகிந்தானந்த
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே உத்தியோகபூர்வ பயணமாக அமெரிக்கா சென்றமைக்கான காரணம் குறித்து மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ கருத்து தெரிவித்துள்ளார்.
மகிந்தானந்த அளுத்கமகே, மத்திய வங்கி பிணைமுறி மோசடி வழக்கில் ரணிலை சிறையில் அடைக்கும் வரை தம்மால் தூங்க முடியாது என்று கூறியவர்.
ஒருவேளை அவருக்கு தூக்கம் வராததால் அமெரிக்காவிற்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கலாம் என ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
மேலும், மகிந்தானந்த மட்டுமல்ல ரோகித அபேகுணவர்த்தனவும் ரணிலுடன் அமெரிக்காவில் இருந்தார் என்று ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியுடன் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களில் ஈடுபட்டு வரும் அவர்கள் இருவரும், ஜனாதிபதியுடன் முரண்பட்ட கருத்துக்களைக் கொண்டவர்கள் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கட்சி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் கட்சி உட்பட பல எதிர்க்கட்சிகள் விரைவில் ஜனாதிபதியுடன் இணைந்துகொள்ளும் எனவும் நளிந்த ஜயதிஸ்ஸ எதிர்வை வெளியிட்டுள்ளார்.