இலங்கை

இலங்கையை காப்பாற்ற பிரித்தானிய பிரபலத்திற்கு 210000 டொலர்

Published

on

இலங்கையை காப்பாற்ற பிரித்தானிய பிரபலத்திற்கு 210000 டொலர்

கொழும்பு துறைமுகம் மற்றும் இலங்கை முதலீட்டுச் சபை திட்டங்களுக்கு புதிய முதலீடுகளை ஈர்க்கும் வகையில் டுபாயில் விசேட நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பிரித்தானிய முன்னாள் பிரதமர் டேவிட் கமரூன் தலைமையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய, முதலீட்டு ஊக்குவிப்பு நிபுணர்களின் பங்குபற்றுதலுடன் டுபாய் மற்றும் அபுதாபியில் இரண்டு நாள் பிரச்சார செயற்திட்டம் எதிர்வரும் 26 மற்றும் 27ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

இதற்கு நிபுணத்துவ ஆதரவை வழங்கும் பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டேவிட் கமரூனுக்கு இலங்கை நாணயத்தில் 697,00000 ரூபா ( 2,10000 அமெரிக்க டொலர்) வழங்கப்பட உள்ளது.

கொழும்பு துறைமுகத்தை கட்டுப்படுத்தும் சீன நிறுவனமான Check Port City Private Limited மூலம் அனைத்து கொடுப்பனவுகளும் செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version