இலங்கை
பிள்ளையானின் கருத்துக்கு நாடாளுமன்றில் பதிலடி
பிள்ளையானின் கருத்துக்கு நாடாளுமன்றில் பதிலடி
தலதா மாளிகைக்கு குண்டு வைத்தவர்கள், ஜோசப் பரராஜசிங்கத்தை கொன்றவர்கள், ட்ரிப்போளி முகாம்களை வைத்துக்கொண்டு லசந்த விக்ரமதூங்கவை கொன்றவர்கள், 600 பொலிஸ் உத்தியோகத்தர்களை கொன்றவர்கள் இன்று எம்மை பேச விடாமல் செய்கிறார்கள் என நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
“சிறுபிள்ளைத்தனமான கருத்துக்களை முன்வைக்க வேண்டாம்” என்ற பிள்ளையானின் கருத்திற்கு நாடாளுமன்றத்தில் நளின் பண்டார பதிலளிக்கும்போதே இதனை தெரிவித்துள்ளார்.
“நான் சர்வதேச விசாரணைக்கு தயார் நீங்கள் அதை எப்பொழுது நடத்துவீர்கள் என்பதை சொல்லுங்கள் அதற்கு தயாராக இருக்கின்றேன்.
அது மாத்திரமல்ல நீங்கள் எதிர்க்கட்சியில் இருந்தாலும் குண்டு வைத்த விடயங்கள், நடந்து முடிந்த விடயங்கள் உங்களுடைய தலைவருக்கு அதற்கு பின்னர் நாட்டின் பதவி துறந்த ஜனாதிபதி அதிகாரத்தை வழங்குவதற்கு முன்வந்தார்.
அவற்றையெல்லாம் மறந்துவிட்டு ஒரு சிறுபிள்ளைத்தனமாக பேசிக் கொண்டிருக்கின்றீர்கள், சிறு பிள்ளைத்தனமான கருத்துக்களை முன்வைப்பதை எண்ணி நான் கவலை அடைகின்றேன்”என பிள்ளையான் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் பிள்ளையானின் கருத்திற்கு பதிலளித்த நளின் பண்டார,
“கௌரவ சபாநாயகர் அவர்களே பிள்ளையானுக்கு இந்த விடயங்கள் சிறுபிள்ளைகளுக்கு உரிய செயலாக இருக்கக்கூடும், எனினும் உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலில் உயிரிழந்த, காயம் அடைந்த மக்களுக்கும் இன்று பாதுகாப்பு இல்லாமல் வாழும் மக்களுக்கும் இந்த விடயங்கள் சிறுபிள்ளைத்தனமானவை அல்ல.
நீங்கள் இந்த நாட்டின் வரலாற்றில் செய்தவற்றை நாம் நன்றாக அறிவோம். உங்களுடைய ஆற்றல் எங்களுக்கு தெரியும். உங்களினால் எங்களை அமைதி படுத்த முடியாது. இதில் ஒரு நியாயம் கிடைக்கும் வரையில் நாம் தொடர்ச்சியாக குரல் கொடுப்போம்.
உங்களினால் எங்களை கட்டுப்படுத்தி விட முடியாது. இது அரசாங்கத்தின் பிழையாகும் தலதா மாளிகைக்கு குண்டு வைத்தவர்கள், ஜோசப் பரராஜசிங்கத்தை கொன்றவர்கள், ட்ரிப்போளி முகாம்களை வைத்துக்கொண்டு லசந்த விக்ரமதூங்கவை கொன்றவர்கள், 600 பொலிஸ் உத்தியோகத்தர்களை கொன்றவர்கள் இன்று எம்மை பேச விடாமல் செய்கிறார்கள்.
இதுதான் உண்மை மண்ணெண்ணெய் ஊற்றும் போது சாரைப்பாம்புகளுக்கு இருக்க முடியாது. அது போன்ற ஒரு நிலைமையை இன்று உருவாகியுள்ளது. இது எல்லாமே திட்டமிட்டு செய்யப்படுகின்றது. நான் என்னுடைய பேச்சை வேறொரு இடத்தில் இருந்து ஆரம்பிக்க இருந்தேன்.
எனினும் இந்த இடத்தில் இருந்து ஆரம்பிக்க நேரிட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பிள்ளையான் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
அந்த காலப்பகுதியில் சஹ்ரானின் சகாக்கள் காத்தான்குடி சம்பவம் ஒன்று தொடர்பில் அதே சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்.
இந்த இடத்திலேயே இந்த இரண்டு தரப்புகளும் ஒன்றிணைந்து பின்னர் அசாத் மவுலானா கூறுவது போன்று இவர் அந்த குழுவினரை வனாத்துவில்லுவில் வைத்து சலேவிடம் அறிமுகம் செய்கின்றார்.
இந்த அனைத்துமே அதிகாரம் பெற்றுக் கொள்வதற்கான முயற்சியே ஆகும்.” என தெரிவித்துள்ளார்.