இலங்கை

இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்திய பயணப்பைக்குள் சடலம்

Published

on

இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்திய பயணப்பைக்குள் சடலம்

சீதுவ – தண்டுகங் ஓய பகுதியில் பயணப்பைக்குள் மிதந்த நபரின் சடலம் தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் உணவகம் ஒன்றை நடத்தி வந்த ஒருவர், அவரது இரண்டு மகன்கள் மற்றும் மூன்று பணியாளர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சிசிடிவி காட்சிகளின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னரே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் இந்த நபரை உணவகத்தினுள் அடித்துக் கொன்று, பயணப் பையில் வைத்து வாகனத்தில் ஏற்றிச் சென்று தண்டுகங் ஓயாவில் வீசியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Exit mobile version