இலங்கை
இலங்கையில் மீண்டும் குண்டுகள் வெடிக்கும்: அச்சத்தில் ஆழ்த்தியுள்ள சனல் 4
இலங்கையில் மீண்டும் குண்டுகள் வெடிக்கும்: அச்சத்தில் ஆழ்த்தியுள்ள சனல் 4
இலங்கையில் அடுத்த தேர்தலுக்கும் குண்டுகள் வெடிக்கும். இந்தக் குண்டுகளை இந்துக்களுக்கும் பௌத்தர்களுக்கும் இடையே மோதலை ஏற்படுத்த முன்னைய தரப்பினர் வைக்கப் போகின்றனர் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான அமைப்பின் தேசிய இணைப்பாளர் வணபிதா. மா.சக்திவேல் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
திலீபனின் 36ஆம் நினைவஞ்சலி வாரத்திலே இலங்கையின் அரசியல் நிலைமை தமிழ் மக்களுடைய எதிர்பார்ப்புக்கு மத்தியில் சனல் 4 ஆவண திரைப்படம் கொண்டுவந்துள்ள செய்தி இன்று முழுநாட்டையும் அச்சத்தில் ஆச்சரியத்தில் தள்ளியதுடன் இந்த நாட்டை ஆள்கின்றவர்கள் கொலைகாரர்கள் என்பதை மீண்டும் வலியுறுத்தியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.