இலங்கை

ஜோர்தானில் பணிபுரியும் பெண்களுக்கான காப்பீடு அறிமுகம்

Published

on

ஜோர்தானில் பணிபுரியும் பெண்களுக்கான காப்பீடு அறிமுகம்

ஜோர்தானில் வீட்டு வேலை செய்யும் பெண்களின் பாதுகாப்பிற்காக புதிய காப்புறுதிக் கொள்கையொன்றை அறிமுகப்படுத்த இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, பெண் தொழிலாளியை சம்பந்தப்பட்ட வேலைக்கு அமர்த்தும் முதலாளி இந்த காப்பீட்டை பெற்றிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் வெளிநாட்டு வேலைக்காக பணியகத்தில் பதிவு பெறுவதற்கு தொழிலுக்காக செல்லும் பெண்கள் இந்த காப்பீட்டு சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

ஜோர்தானில் வீட்டு வேலையில் ஈடுபடும் பெண்கள் இந்தக் காப்பீட்டைப் பெறுவது கட்டாயமாகும், அதற்காக ஜோர்தானில் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட மூன்று காப்பீட்டுத் திட்டங்களில் தகுந்த காப்பீட்டைத் தேர்ந்தெடுக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இது வேலை ஒப்பந்த காலத்தில் பணியாளரின் மரணம் அல்லது நிரந்தர முழு ஊனம் ஏற்பட்டால் காப்பீட்டு இழப்பீடு வழங்குகிறது. இது தவிர, மருத்துவ சிகிச்சை, அறுவை சிகிச்சை மற்றும் கோவிட் போன்ற தொற்றுநோய்களுக்கு காப்பீடு இழப்பீடும் கிடைக்கிறது.

Exit mobile version